Thursday, June 9, 2011

... மற்றப்படி சபாஷ்! (உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு 2011)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 10.05

மலேசியாவிலிருந்து பஷீர் அலி


கோலாகல நிகழ்வுகளுக்கென்றே இந்த ஊரை யாரோ செதுக்கி வைத்திருக்கின்றனர் போலும்! அல்லது ஆயிரம் கலியாணங்களுக்காகப் போடப்பட்ட தோரணங்கள் இன்னும் அவிழ்க்கப்படாமல் தொங்குகின்றதோ?

அதிசயத்திலிருந்து மீள முடியா இந்த அழகிய கோலாலம்ப+ர் நகரில் இஸ்லாமிய தமிழிலக்கியம் ஒரு மாநாடு காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். வரிசையில் நின்று சாப்பாட்டுக்கு சண்டைபோட்ட ஏழாவது மாநாட்டை சென்னையில் கண்ட எனக்கு இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

திட்டமிட்டபடி மே 20,21,22 ஆகிய திகதிகளில் உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டை கோலாகலமாக நடத்த மலேசிய கோலாலம்ப+ர் நகரம் தயாராக இருந்தது.

18,19,20ஆம் திகதிகளில் இலங்கை, இந்தியா, சிங்கப்ப+ர், மியன்மார், ஓமான், டுபாய், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்த 800இற்கு மேற்பட்ட இலக்கியப் பேராளர்கள் கோலாலம்ப+ரை வந்தடைகின்றனர். வந்தோரையெல்லாம் வரவேற்று உபசரித்து தங்குமிடம் கொடுத்து உபசரிப்பின் உச்சத்தில் வைக்கிறது. ~மலாயா பல்கலைக்கழக
வளாகம்!

~~பச்சைப் பசேலெனும் காட்சி.

எங்கு பார்த்தாலும் இதந்தரும் குளுமையின் ஆட்சி.

எச்சிறு வரட்சியும் இல்லை நல்ல

எழிலினில் காணலாம் இன்பத்தின் எல்லை.

மலேசியாவைப் பற்றிய கவிதையை களத்தில் அனுபவிக்கிறேன்.

விரிந்து பரந்து கிடக்கும் அறிவுக் கருவ+லம் மலாயா பல்கலைக்கழக வளாகங்கள் தோறும் இலக்கிய நெஞ்சங்களின் மணம் வீசுகிறது.

மே 20 வெள்ளிக்கிழமை மாலை தொடக்க விழா துவங்கப் போகிறது. மலாயா பல்கலைக்கழக முதல் கல்லூரி வளாகம், ரூமா வளாகம் என்பவற்றில் தங்கியிருந்த பேராளர்களை சுமந்து கொண்டு பேருந்துகள் நகர்கின்றன.

ராஜகோட்டையாய் உயர்ந்து நிற்கும் புத்ரா உலக வாணிப மைய மெர்டேகா மண்டபம் மணப்பெண்ணாய் அலங்காரமிட்டு வரவேற்கிறது.

~இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்
மாநாட்டு கருப்பொருள் சுமந்த பதாகை ஜொலிக்க, பரந்த விரிந்த மெர்டேகா மண்டப ஆசனங்கள் பேராளர்களை இழுத்து அமர்த்துகின்றன.

மாயின் அப+பக்கர் பரக்கத் அரங்கமாக அறிமுக விழா தொடங்குகிறது. நம்நாட்டு மதுரக்குரல் பீ.எச். அப்துல் ஹமீதின் கம்பீரத் தொனியால் மண்டபம் அதிர, நிகழ்சிகள் தொடங்குகின்றன.

இலட்சிய வாழ்வு பற்றி பேசப் புறப்பட்ட இலக்கிய மாநாடு மஃரிப் தொழுகையை மறந்து விடுமா என்ன? 7.15க்கு நிறுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் 8.00 மணிக்கு தொடக்க விழாவாய் மீண்டும் தொடர்கின்றன.

மலேசிய மண்ணில் ஓர் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்த வேண்டும் என்ற சிந்தனை வித்தை 1989ல் தூவிய மர்ஹ_ம் எஸ்.ஓ.கே. உபைதுள்ளா அரங்காக மெர்டேகா மண்டபம் மீண்டும் களைகட்டுகிறது.

மலேசிய பிரதமர்துறை அமைச்சர் மாண்புமிகு டான்ஸ்ரீ நூர் முஹம்மது யாக்கூப் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இலங்கை நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் கௌரவ விருந்தினராகவும் பங்கெடுக்க விழா தொடங்கிற்று.

~~வேறுபாடுகளை நாம் சகித்துக் கொள்வதில்லை அந்த வேறுபாடுகளை நாம் கொண்டாடுகிறோம்

மண்டபம் அதிர பிரதமர்துறை அமைச்சரின் வாயிலிருந்து உதிர்ந்த அந்த தாரகமந்திரத்தை சுமந்துவந்து நமது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விதையாய் தூவ வேண்டும் போலிருந்தது!

கோலாலம்ப+ர் முழுவதும் ப+த்துக் குலுங்கும் ப+ஞ்செடிகளும் செல்வச் செழிப்பும் இந்த தாரக மந்திரத்திலிருந்துதான் முளைத்திருக்க வேண்டும்!

~~இரு சமூகங்கள் தமக்குள் முட்டி மோதிக் கொண்டபோது இடைநடுவில் நசுங்குண்டு கிடந்த இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது சமாதானச் சூழலில் இரு சமூகங்களுக்குமிடையேயான உறவுப் பாலமாக நின்று சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தை நகர்த்திக் கொண்டிக்கிறது. மலேசிய தமிழ் பேசும் முஸ்லிம் இந்து மக்கள் எமக்கு கரம் கொடுத்து உதவ வேண்டும்

இலங்கையின் செய்தியை இலங்கிச் சென்றார் அமைச்சர் ரஊப் ஹக்கீம்.

இரவு பத்தரை தாண்டிக் கொண்டிருந்தாலும் யாருக்கும் நித்திரையோ பசியோ எடுக்கவில்லை! தொடக்க விழா தொடர்ந்து கொண்டிருந்தது. கோலாலம்ப+ரை மூடிக் கிடந்த மலர்ச் செடிகள் இப்போது பெரும்பாலும் பனித் திவலைகளை அள்ளிப் போர்த்தி உறங்கியிருக்கலாம்.

சர்வதேச மாநாடொன்றுக்கே இலக்கணமான மண்டபம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, இராப்போசனம்...

~~இந்த நிமிடம் வரை செழிப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கும் இம்மாநாடு அடுத்துவரும் மூன்று நாட்களுக்கும் விமரிசையாக அமையும் என்பதை தொடக்க விழா கட்டியம் கூறிவிட்டது

ரஊப் ஹக்கீம் அவர்கள் பேசியதுபோன்று அந்த கட்டியம் நிதர்சனமானது.

21ம் திகதி சிகப்புச் சூரியனும் மகிழ்ச்சியை அள்ளிப் ப+சிக் கொண்டுதான் கோலாலம்ப+ருக்கு செங்கோலமிட்டான்.

மலாயாப் பல்கலைக்கழக கலைத்துறை மண்டபங்கள் ஆய்வரங்கங்களுக்காய் விரிந்து கிடந்தன.

மொத்தமாக ஒன்பது ஆய்வரங்கங்களில் கலாநிதி டாக்டர் ம.மு. உவைஸ் அரங்கம், அறிஞ்ர் சித்தி லெப்பை அரங்கம், புலவர்மணி ஷரிபுத்தீன் அரங்கம் ஆகிய மூன்று அரங்கங்கள் இலங்கைப் பேரறிஞர்களை ஞாபகமூட்டி நின்றன.

ஒவ்வொரு அரங்கிலும் தலா மூன்று தலைப்புகளில் மொத்தமாக 27 ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

பேராளர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க மனமின்றி வாய் பிளந்து கூர்ந்து கவனிக்க வைப்பதில் மண்டப அமைப்பும் ஆய்வுரைகளை சமர்ப்பித்தவர்களின் ஆளுமையும் பெரும் இடத்தைப் பிடித்துக் கொண்டன.

~இறை மறை காட்டும் இலட்சிய வாழ்வும் நபிகள் நாயகத்தின் முன்மாதிரியும் எனும் தலைப்பிலான ஆலிம்கள் அரங்கம் ஆய்வரங்குகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. அதனால்தான் இருக்கைகள் நிரம்பி வழியவே வழிப்பாட்டை நிறைத்து நின்றது பேராளர் கூட்டம்.

கம்பம் பீர் முஹம்மது பாக்கவி போன்ற புகழ்ப+த்த பேச்சாளர்களின் ஆய்வுரைகளுக்குத் தனியிடம் இருந்தாலும், மார்க்கம் பேசப்படும் இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் இக்காலகட்டத்தில் திரைப்படங்கள், ஊடகங்கள் என பல ஆய்வரங்குகள் பக்கத்து மண்டபங்களில் ஜொலித்துக் கொண்டிருக்க, ஆலிம்கள் அரங்கு நோக்கிப் படையெடுத்த பேராளர்களைப் பார்த்தபோது சில்லென்றது.

ஆய்வரங்குகள் நிறைவுற பகல்போசனம், ஓய்வு, நூல் வெளியீடுகள் என நகர்ந்த இரண்டாம் நாள் நிகழ்வுகளை அணுவணுவாய் இரசித்த பகல் சூரியன் பிரிய மனமின்றி செங்கதிரை அடிவானில் பரப்பி கையசைத்தான்.

மாநாட்டுக்கே திலகமிடும் கருத்தரங்கம் சனிக்கிழமை இரவை தூங்கவிடாமல் உயிர்ப்பித்தது. தென்னாசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதுவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த பொதுக் கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய பாத்திமா முஸாஃபர், பாரதி கிருஷ்ண குமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மது போன்றவர்களின் உரை நிகழ்வுக்குத் தலைமையேற்ற முஹம்மது இஸ்மாயீல் ஷரீஃப் அவர்கள் கூறியது போன்று இடியாய்... புயலாய்... சுனாமியாய்... அடித்து ஓய்ந்தது.

நாளை வரை இந்தக் கருத்தரங்கம் தொடராதா என அங்கலாய்க்குமளவு இனிமையாய் அந்த அரங்கம் நகர்ந்ததால்தான், மின்சாரம் காலை வாரிவிட்ட அரை மணிநேர இருள் கழிந்தபோதும் ஆடாமால் அசையாமல் பேராளர் கூட்டம் நின்றிருந்தது.

~~நிறையப்பேர் டிக்கட் இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டார்கள் போல

என அவைத் தலைவர் கூறியதுபோன்று அறிஞர்களின் உரையில் லயித்துப்போன அரங்கம் கல்லோ மலையே என நின்றது.

நாங்களெல்லாம் சட்டைக் கொலரை உயர்த்தி விட்டுக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தது இலங்கை சார்பாக கலந்து கொண்ட அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் சிறப்புரை.

கவிப் பிரியர்களின் செவிகளுக்குத் தேன் வார்க்கவும் இலக்கிய நெஞ்சங்களுக்கு புத்துணர்வ+ட்டவும் ஞாயிறு பகல் போஷன சோம்பலை விரட்டவும் பெர்டானா சிஸ்வா மண்டபத்தில் கவியரங்கம் களைகட்டத் தொடங்கியது.

கவிக்கோ அப்துர் ரஹ்மான் கவிமழை பொழிவார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஒரு சில வரிகளைத் தூவிவிட்டு அவரின் அரைத்த மாவையே மீண்டும் அரைத்ததும் அதற்கும் கைதட்டியதும் கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது.

கவிஞர்களான சீனி நைனா முஹம்மது, ஹாஜா மைதீன், மைதீ சுல்தான், புலவர் ம.மு. அன்வர் போன்ற பிரபலங்களின் விக்கட்டுகளையெல்லாம் வீழ்த்துமளவு இலங்கைக் கவிஞர்களான நஜ்முல் ஹ{ஸைன், பொத்துவில் அஸ்மின் ஆகியோரின் கவிதைகள் கரகோஷத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எங்கள் தேசமும் அவர்களுக்கொரு தடவை கைத்தட்டிக் கொள்ளும், வாழ்த்துக்கள்.

~~அண்ணல் நபிகளின் அழகிய பண்புகள்

கவியாய் சொரிய, ஈமானியத் தீ பற்றி எரிய அண்ணலார் பற்றிய அறிவு விரிய அரங்கம் ஒருகணம் எழுந்து நின்றது.

ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும்? மே 22 ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் இறுதி நாள், மாலை 5. மணி நிறைவு விழா காண மலாயா பல்கலைக்கழக பெர்டானா சிஸ்வா மண்டபத்தில் பேராளர்கள் திரள்கிறார்கள்.

மீண்டும் பீ.எச். அப்துல் ஹமீத் மற்றும் மலேசிய வானொலிப் புகழ் நாச்சியா மஜீது ஆகியோரின் கணீர் குரல்கள் பெர்டானா சிஸ்வாவை நிறைக்க ஒரு பக்கம் வெற்றிகரமானதொரு விழா நிறைவுற்ற மகிழ்வும் மறுபக்கம் இலக்கிய இதயங்களைப் பிரியப்போகும் சோகமும் வந்துவந்து போக அரங்கம் களைகட்டுகிறது.

~~இந்த மலேசிய மண் இலங்கை சிறுபான்மை சமூக அரசியல் தலைமைகள் இருவரை எமக்கு தந்து அழகுபார்த்த மண். ரீ.பி. ஜாயா, தந்தை செல்வா இருவரும் இந்த மலாயா மண் ஈன்றெடுத்த முத்துக்கள். நாங்கள் அந்த நன்றிக்கடனை ஒருபோதும் மறக்க மாட்டோம்...

பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவ+த் பேசியபோதுதான் சிறுபான்மை அரசியல் வித்துக்களே மலாய் மண்ணிலிருந்து முளைத்தது பலருக்குத் தெரியவந்தது. இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இப்படி ஒரு தொப்புள் கொடி உறவா? இலக்கிய மாநாடாவது இதை ஒருதரம் உரசிப்பார்க்க சந்தர்ப்பம் அளித்ததற்கு நன்றி சொல்லத்தானே வேண்டும்!

~~இஸ்லாம் மொழி தாண்டிய மதம் தமிழ் மதம் தாண்டிய மொழி. இரண்டும் இணைந்த அற்புத நிகழ்வுதான் இந்த இஸ்லாமிய தமிழக்கிய மாநாடு...

அற்புத வரிகளை உதிர்த்து அமர்ந்தார் அமைச்சர்.

புரியாத பிரியம் பிரியும்போது புரியும். ஆம், அந்த இலக்கிய உள்ளங்களின் சில நாட்களேயான உறவைப் பிரியும் கடைசி நேரத்தில் உருவான சோகத்துக்கு மருந்து கட்டுவதாய் மறு நாள் ஏற்பாடு செய்யப்பட்ட முழுநாள் சுற்றுலா அமைந்திருந்தது.

வெளிநாட்டுப் பேராளர்களை சுமந்த மூன்று பேருந்துகள் கோலாலம்ப+ர் நகரை சுற்றி வந்தன.

சலவாத்துடன் இனிதே விழா நிறைவுற்றது என்று சொல்லி முடித்து விட்டால் வெறும் புகழ்பாடலை மட்டும்தான் நான் தந்திருப்பேன்.

கல்யாண வீட்டில் பீங்கான் உடைவது சகஜம்தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதனையும் கடந்து சர்வதேச தரத்திலான ஒரு மாநாட்டின் முடிவில் மாநாட்டுத் தீர்மானமொன்று வாசிக்கப்படாமல் விட்டமை என்னவோ வயிறு நிறைய சாப்பாடு தந்துவிட்டு குடிக்க தண்ணீர் தராமல் விட்டது போலிருந்தது.

ஒவ்வொரு அமர்விற்கும் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இலக்கியவாதிகளுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதை ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பேசுவதற்கு தமிழ்நாட்டு ~பட்டிமன்றக்காரிக்கு ஏன் தலைப்புக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதுவும் இனிய இல்லற வாழ்வு குறித்துப் பேச வேறு நபர் கிடைக்கவில்லையா ஏற்பாட்டுக்குழுவுக்கு? குர்ஆன் வசனங்களை எடுத்து மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட அவரது பேச்சு திண்டுக்கல் லியோனிக்கு வேண்டுமானால் ~சா... என தலையாட்டுவதற்கு பொருத்தமாக இருக்கலாம். இதைக் கேள்விப்பட்டால் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்று சில ~பர்வீனாக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ் நாட்டிலிருந்து 70 மட்டிலான பேராளர்கள் வந்திருந்தபோது அவர்களுள் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரே மேடையேறியபோதும் நம் நாட்டிலிருந்து மொத்த மு.கா. எம்பிக்களும் மேடைகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எதற்காக? அஸ்வர் ஹாஜியாரைத் தவிர்த்து அங்கு வந்திருந்த அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் மு.கா. காரர்களே!

அவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்ளும் முழு சுதந்திரமும் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் ஆள் சேர்த்த மு.கா. வேறு இன்னும் சில தமிழ்சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று இஸ்லாமிய இலக்கியத்தை அவர்களுக்கும் புகட்டியிருந்தால் புரிந்துணர்வு ஒன்று ஏற்படக் காரணமாயிருந்திருக்குமல்லவா?

மு.கா. இம்மாநாட்டை அரசியலாக்கி விட்டதாக சிலர் குமுறுவதில் சில உண்மைகள் இல்லாமலும் இல்லை. ஆனால் பேராளர்களுடைய இலட்சங்களை வாங்கி ஒரு முகவரிடம் கொடுத்து விமான டிகட் வாங்கி பேராளர்களை அலைக்கழித்த அவப்பெயரை ஏற்பாட்டுக்குழு செய்யும்போது, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றுவரும் கௌரவ உறுப்பினர்கள் ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று ஒரு இலக்கிய நண்பன் கேட்ட கேள்வியை முற்றாக மறுத்துவிட முடியவில்லை.

~~எவ்வளவுக்கு டிகட் வாங்கினீங்க?

என்று கேட்ட நண்பரிடம், ~~மலேசியன் எயார்லைன்ஸ் ப்ளைட்டில் 28 ஆயிரம் ரூபாவுக்கு டிகட் வாங்கி வந்தேன்

என்று கூறினேன். ~~34 ஆயிரம் ரூபாவுக்கு கவுண்டுபோன ப்ளைட்டில் ஏற்றிவந்து அலைக்கழித்து விட்டார்கள். அவர்களை நாட்டுக்கு சென்று பார்த்துக் கொள்கிறNhம்

என்று குமுறிக் கொண்டிருந்த சில இலக்கிய நண்பர்கள் மலேசிய மக்களின் விருந்தோம்பல் மற்றும் வரவேற்பு ஆகியவற்றால் அதனை மறந்து விட்டார்கள் போலும்.

ஆனால், கடந்த 2007ல் சென்னை மாநாட்டில் ஏற்பட்ட சலிப்பை அடுத்து மனம் நொந்து கொண்டிருந்த இலக்கிய ஆர்வலர்களுக்கு மலேசிய மாநாடு ஒத்தடம் கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் அவர்களின் துணிச்சலை இங்கு குறைத்து மதிப்பிட முடியாது.

எனவே, மேற்சொன்ன ஓரிரு தவறுகளைத் தவிர, 2011 உலக இஸ்லாமிய தமிழலக்கிய மலேசிய மாநாட்டுக்கு சபாஷ் போடலாம்!
-----------------------------------------------------------------------------------------------------------

மேற்குறித்த கட்டுரை ஜூன் 01 -14 (198)வது எங்கள் தேசம் பத்திரிகையில் நடுப்பக்கங்களில் (12ம் 13ம்) பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்பத்திரிகைக்கு நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------

இனி

சகோதரர் பஷீர் அலி சொல்ல மறந்தவையும் அவரது கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவை பற்றிய நமது கருத்துக்களும்.


சகோதரர் பஷீர் அலி எப்படி விமானச்சீட்டுப் பெற்றார், யாரிடம் பெற்றார்  என்பதையும் மற்றும் இலங்கைக் குழுவுடனான அனுபவங்கள் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. மலேசியாவில் இலங்கைக் குழுவுடனான அவரது அனுபவம் எப்படியிருந்தது என்பதையும் சொல்ல மறந்து விட்டார்.

மாநாடு என்று ஒன்று நடந்தால் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது அவசியம். அப்படி எந்தத் தீர்மானங்களும் மலேசியாவில் நிறைவேற்றப்படவில்லை. இதை எனது பட்சி ஏற்கனவே உணர்த்தியதால்தான் இது மாநாடே அல்ல என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துககு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் அதையொட்டித் தீர்மானங்கள் அறிவிக்கப்படும். அந்த எண்ணமோ நோக்கமோ குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினருக்கு இருக்கவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் வேறு. எனது தொடர் கட்டுரைகளைப் படித்து வந்திருந்தால் ஓரளவு அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இதை நண்பர் பஷீர் செய்குதாவுத் சுட்டிக் காட்டிதையும் அதை கௌரவ அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழி மொழிந்ததையும் சகோதரர் பஷீர் அலி குறிப்பிட மறந்து விட்டார். (இந்த விடயத்தில் இருக்கும் ஒரு வேடிக்கையை மற்றொரு கட்டுரையில் நான் குறிப்பிடுவேன்.)

இங்கிருந்து சென்ற ஒரு ஊடகப் புள்ளி மலாயா பல்கலைக் கழக முக்கியஸ்தர் ஒருவருடன் விழா முடிவடைந்த பின் இது பற்றிக் கலந்துரையாடுகையில் தீர்மானங்கள் பற்றிச் சுட்டிக் காட்டிய போது அவையெல்லாம் அவசியமில்லை என்று குப்பப்பிச்சை இக்பால் குழு தெரிவித்து விட்டதாம். (இது நமது கௌரவ அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)

////ஒவ்வொரு அமர்விற்கும் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இலக்கியவாதிகளுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதை ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்/// என்று சகோதரர் பஷீர் அலி எழுதுகிறார்.

இது - இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்ட குழுவின் தலைவரான குப்பப் பிச்சை முகம்மது இக்பாலின் அரசியல் மாநாடே தவிர இலக்கிய மாநாடு அல்ல என்பதை, இலங்கையில் உள்ள ஒரு முஸ்லிம்  கட்சியிடம் மாத்திரம்  கொண்டு வந்த தாரை வார்த்து விட்டுப் போனதையும் இந்தியாவில் திமுக - கழகக் கண்மணியான கவிக்கோவை முன்னிலைப்படுத்தியதையும் கொண்டு பஷீர் அலி புரிந்து கொள்ளத் தவறி விட்டார். நல்ல வேளை மாநாடு முடிவதற்குள் புரிந்து கொண்டார்.

///நம் நாட்டிலிருந்து மொத்த மு.கா. எம்பிக்களும் மேடைகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எதற்காக?///

இது நியாயமற்ற கேள்வி சகோதரரே... முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எல்லோரும் இலக்கிய தாகம் மிகுந்தவர்களாக ஏன் இருக்கக் கூடாது. இலங்கையில் அவர்களது இலக்கிய நயம் மிகுந்த உரைகளுக்கு இடமில்லையென்றால் அவர்கள் என்ன செய்ய முடியும். அதற்குப் பொருத்தமான இடத்தை அவர்கள் தேர்ந்தெடுக் கொள்வது நியாயம்தானே...

இந்தக் காலப்பிரிவில் ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை சம்பந்தமாக ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. மலேசிய விழா நடந்து கொண்டிருக்கும் போதுதான் பல்கலைக் கழக புகுமுக மாணவர்களுக்கு முன் பயிற்சி பற்றிய பிரச்சினை நடந்தது. இந்தப் பிரச்சினை பற்றி சகோதரர் இனாமுல்லாஹ் மஸீஹூத்தீன் தெரிவித்ததாக ஓர் இணையத்தளத்தில் வெளியான செய்தியை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். இதோ அது...

////மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் முகாம்களில் பயிற்சி பெரும் மாணவ மாணவியர் ஆண்கள் , பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி 25 பயிற்சி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும்  இந்த விடயத்தில் குருடர்களாகவும், ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு கல் வீசவேண்டாம் என்றும் தான் முஸ்லிம்களுக்கு ஆலோசனை தெரிவிப்பதாகவும் விரைவாக அடுத்த கட்ட மாணவர் பயிற்சி ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் மற்றும் ஏனையோர் கண்டிப்பாக அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை சந்தித்து ஆண் , பெண்களை பயிற்சி நடவடிக்கைகளில் வேறுபடுத்துவது பற்றி சீரியசாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்திக்க அவசர அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.////

இந்த விடயங்களிலெல்லாம் இலக்கியமா பேச முடியும்? மாநாடு நடத்தினால் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று மலேசியக் குழுவுக்கு சொல்லிக் கொடுப்பது யாராம்? அங்கு அதிதிகள் கதிரைகளை நிரப்புவது யாராம்?

இவர்கள் போகாமல் விட்டிருந்தால் இந்த நூற்றாண்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை அரசியலாக்கி சாதனை புரிந்த மலேசியர்கள் எவ்வளவ ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லையா?

அப்படிப்பட்ட நீங்கள் குறிப்பிவது போன்ற துணிச்சல் நிறைந்த இக்பால் கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால்தானே இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு மணிமகுடம் சூட்டியதாகக்  கம்பீரமாக நின்று போட்டோவுக்குப் போஸ் கொடுக்க முடியும்!










இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: