Wednesday, April 27, 2011

Ur words r rubbish

Ur words r rubbish. stop writin. dnt b a fool

இன்று பி.ப. சரியாக 2.07க்கு எனது கைத் தொலைபேசிக்கு வந்த குறுஞ் செய்தி இது. இந்தச் செய்தி 077 1131397 என்ற இலக்கத்திலிருந்து வந்திருந்தது.


இவர் யார்? எதற்காக என்னை எழுத வேண்டாம் என்கிறார்? பத்திரிகை, சஞ்சிகைகளில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? இணையங்களில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்கிறாரா?

நான் எழுதுவது எனது சுதந்திரம். என்னைக் கட்டுப்படுத்தும் இந்தக் கைப்பிள்ளை யார்? எனது சொற்கள் குப்பை என்கிறார்! இருந்து விட்டுப் போகட்டும். இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? குப்பையைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும். அவர் மாநகர சபைக் குப்பை வண்டியில் வேலை செய்பவரா? அல்லது ‘குப்பை’ களோடு நெருங்கிய உறவு உள்ளவரா?

எனது எழுத்துக் குறித்த சிலாகிப்புக்களையே இது வரை நான் சந்தித்து வந்துள்ளேன். அவையே மேலும் மேலும் நான் எழுதுவதை உற்சாகப் படுத்துகின்றன. எனது வலைப்பூவைச் சராசரியாகத் தினமும் 60 பேர் முதல் 120 பேர் வரை உலகம் முழுவதிலுமிருந்து படிக்கிறார்கள். அது குப்பை என்றால் இப்படி இரவிலும் பகலிலும் படித்துக் கொண்டா இருப்பார்கள்?

எழுதுவது முட்டாள் தனம் என்றால் எழுதுபவர்கள் எல்லோரும் முட்டாள்களா?

வந்த அந்தச் செய்திக்கு நான் பதில் சொல்லவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

எனது எழுத்தில் தவறுகளோ பிழைகளோ இருந்தால் அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட முடியும் அல்லவா? இவ்வாறு திரைக்குப் பின்னாலிருந்து கல்லெறியும் கெட்ட பழக்கம் ஏன் அவருக்கு வந்தது. அல்லது அவரது தொழிலே இதுதானா?

என்னுடைய எந்த எழுத்து அவரை நோவு கொள்ளச் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள நான் ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு வெளிச்சத்துக்கு வந்து கருத்துச் சொல்ல வேண்டும். வெளிச்சத்திலேயே நாம் உரையாடலாம்.

அப்படியில்லாத பட்சத்தில் அவர் எந்த வகையில் பேசினாலும் அதற்கு நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. பதில் சொல்லவும் மாட்டேன். இவ்வாறு தொடர்ந்து என்னுடனோ என்னைப் பற்றி வேறு நபர்களுடனோ ‘மொட்டை’ வடிவில் பேசுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. மற்றவர்களும் அதைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்தக் கைப்பிள்ளை புரிந்து கொள்ள வேண்டும்.

அவருக்கு நல்ல புத்தி வர நான் பிரார்த்திக்கிறேன்!



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Muruganandan M.K. said...

உள்ளத்தில் ஒளி இல்லாதவர்கள்
கள்ளமான பெயரிலியாக மாறுவர். அவர்களுக்கு பதிலிறுக்க வேண்டுமா?

Shaifa Begum said...

ஹா ஹா .. கைப்பிள்ள நல்லா வாங்கி கட்டிகிட்டார். இப்போ ரொம்ப திருப்தியா இருக்குமே.
ஒன்னு மட்டும் சொல்லலாம்.எல்லாரும் எழுத்தாளர் ஆகிட முடியாது. கூடவே இறைவன் அருளும் தேவை.
இது இப்ப்டி இருக்க.எழுத்து அவரவர் உரிமை. அதை நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் வாசிக்கிறோம். இல்லன்னா வாசித்து பயன் பெறுங்கள். அப்படியும்
முடியாதென்றால் பேசாமல் இருங்கள்.
தானும் வளராமல் அடுத்தவரையும் வளர விடாமல் பண்ணுவதில் உங்களுக்கு
என்ன லாபம்..?
சின்ன புள்ள தனமா தோனலையா உங்களுக்கு?
ஆளும் வளறனும் அறிவும் வளறனும் அது தான்டா வளர்ச்சி . இது தெரியயலையா உங்களுக்கு?
ஒரு படைப்பாளி தன் படைப்பை நிiற்ய சிந்தனை போராட்டங்களுக்கு மத்தியில் தான் கரையேற்றுகிறார்.
அவர் படைப்புக்கு மரியாதை கொடுக்கனும்.ஒரு தாய் சுக பிரசவதிற்கா எவ்ளவு கஸ்ட படுகிறாரோ
அதே போல தான் ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பை சுபமாக கரையேற்றுவதில் உள்ள சிரமம்.
எனவே தட்டிக் கொடுக்காவிட்டாலும் கூட புற முதுகில் குத்தாமல் வளர விடுங்கள். அதுவே
நீங்கள் சமூகதுக்கு செய்கின்ற பெரும் சேவை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிNற்ன். உலகம் சுருங்கி விட்டது..
எனவே பரந்த சிந்தனை.. தாராள மனம் நம்மில் தேவை.

Sir உங்கள் எழுத்து பணியை தொடர்ந்து செய்யுங்கள். யாவும் அறந்த இwற்வன் உங்கள் பக்கம் இருக்கிறான்.

ASHROFF SHIHABDEEN said...

இந்தப் பதிவைப் படிப்பதற்கான வழியாக முகப்புத்தகத்திலும் இணைப்புக் கொடுத்திருந்தேன். இப்பதிவைப் படித்துவிட்டு முகப்புத்தகத்தில் சில பின்னூட்டங்கள் இடப் பட்டிருந்தன. அவற்றை இங்கே தருகிறேன்.

0 Sajjadh Mustapha
அறிவும் திறமையும் உங்களிடம் உள்ளவரை எவனும் எதுவும் செய்ய முடியாது...உங்கள் வழியில் நீங்கள் தடையின்றி செல்லுங்கள்... உங்களோடு, உங்களில் ஒருவனாய் நாங்கள் என்றும் உடனிருப்போம்

0 கவித் தோழன்
வளம்மிகு நிலங்கள்
மழைத் தூவல்களை மட்டுமல்ல
இடியையும், மின்னலையும் சேர்த்தே
தாங்கவேண்டி இருக்கிறது.....!

0 Jancy Caffoor
கலைஞனுக்கு தடைக் கற்கள் யாவும் படிக்கற்களே!

0 Sonakar Web
பொறுக்காதோர் நிறைந்த பூமியில் நாம் செந்தமிழ் பேசுவதும் குற்றமானதோ !? தொடர்வோம் நம் பயணத்தை..