Monday, May 23, 2011

கனியும் மொழி


தமிழ் கூறும் நல்லுலகில் கனிமொழியின் கைதுதான் இப்போதைக்குப் பிரபலம். ஒரு முறை அவரது இலக்கியம் பற்றிய நேர்காணல் ஒன்றைப் படித்தேன். நீங்கள் கருணாநிதியின் மகள் இல்லையென்றால் இலக்கியத் துறையில் இந்தளவு கவனிப்புக்குள்ளாகியிருப்Pர்களா என்று ஒரு கேள்வி. அதற்கு அவர் நேரடியாகச் சொல்லியிருந்த பதில் ‘இல்லை’ என்பதுதான். எனக்கு அது பிடித்திருந்தது.


அதே கவனக் குவிப்புதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும். இன்று ஊடகங்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாகியிருக்கிறார் கனிமொழி. இணையங்களிலும் கைத்தொலைபேசிகளிலும் ஏராளமான தமாஷான பின்னூட்டங்களும் குறுஞ்செய்திகளும் உலாவுகின்றன. அவ்வாறான ஒரு மின்னஞ்சல் இது.

விசாரணை

அதிகாரி - எதுக்கு ஒங்களக் கொண்டு வந்து வச்சிருக்கம்னு தெரியுமா?

கனி - தெரியலீங்க...

அதி - கலைஞர் டீவிக்கும் உங்களுக்குமுள்ள தொடர்பு என்ன...?

கனி - அது அப்பா பேர்ல அதாவது தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர் கலைஞர் பேர்ல நடக்குற டீவி... நான் மானாட மயிலாட புறோக்றாம் நடக்கக்குள்ள பார்க்கப் போவேங்க... என்னமா ஆடுவாங்க....

அதி - சரத்குமார் அங்கு என்ன செய்கிறார்...?

கனி - நம்ம ராதிகாட ஹஸ்பன்ட் சரத்குமார்தானே... அவரு நடிச்ச படங்கள் கலைஞர் டீவில போடுவாங்க... நானும் பார்த்திருக்கேன்...

அதி - 2 ஜி தெரியுமா?

கனி - இப்ப எல்லாரும் 2 ஜி, 2 ஜீன்னு சொல்லுறாங்க... எனக்கு அப்பிடின்னா என்னான்னே தெரியாது. காந்தி ஜி, நேருஜி பத்தி அப்பா சொல்லியிருக்காரு. இந்திராஜி, ராஜிவ்ஜி, சோனியாஜி பத்தின்னா சொல்லுவேன்...

அதி - ஆ. ராசாவைத் தெரியுமா...?

கனி - அதாவது ஆ... மம்மத ராசா... மம்மத ராசா பாட்டுக்கு ஆடின பையனப் பத்தித்தானே கேக்குறீங்க... நம்ம சூப்பஸ்டாரு மருமகன்தானே... அந்தத் தம்பிக்கு தேசிய விருது கிடைச்சிருக்காம்ல...

அதி - நீரா ராடியா?

கனி - அப்பிடிச் சொல்லுறதில்லீங்க..சார்... நீராடினீயா? என்டுதாங் கேக்கணும். பழங்காலத்துலதாங்க இப்பிடிப் பேசுவாங்க. பழந் தமிழ் இலக்கியத்துல நெறய இடத்துல நீராடுதல் வருது. அப்பா வசனம் எழுதிய அந்தக் காலப் படங்கள்ளயும் சில வேளை இந்த வார்த்தை இருக்குமுங்க... இப்போ நீராடினீயா என்டு யாரும் பேசுறதில்லை சார். குளிச்சிட்டியா என்டு கேட்டா சரி. நான்தான் காலையிலேயே குளிச்சிடுவேன்ல...

அதி - அலைக்கற்றை தெரியுமா...

கனி - அதெப்புடீங்க அலை கற்றையாகிறது... கவிதையில் கூட அப்புடி எழுதேலாதுங்களே... தமிழ் பிழையாகிடும்ல... கற்றைன்னா அது வைக்கோல் கற்றைதான்... ஆ... வைக்கோல்னு சொல்லுறதால வை.கோன்னு நெனச்சுக்க வேணாம்...

அதி - கலைஞர் டீவியில கவிதையெல்லாம் படிப்பீங்களா...?

கனி - இ;ல்லைங்க... ஆனா ஏதோ எழுதுவேங்க... அப்பா ஆட்சியில இருக்கக்குள்ள ஒரு வெள்ளத் தாள்ள இரண்டு போடு போட்டேன்னு வச்சிக்குங்க.... அதைப் பிடிச்சுக்குட்டு ஆஹா.. ஓஹோ... அற்புதக் கவிதைன்னு சொல்லிக்கிட்டுக் கொஞ்சம் அல்லக்கைகள் திரிஞ்சுச்சுகள்... இப்ப நெலமயப் பார்த்தீங்களா.... இனி அதல்லாஞ் சும்மா கிறுக்கல்னு சொல்லிருவாங்க...
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அதே கவனக் குவிப்புதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும். இன்று ஊடகங்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாகியிருக்கிறார் கனிமொழி.
கனியும் மொழி"....

இளைய நிலா said...

"கருவறை வாசனை" தந்தவள்
சிறையறையில் வாசம்