Thursday, May 19, 2011

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிளையா நீங்க....?

பகுதி - 1

(முதற்பகுதியை நீங்கள் சொடுக்கிப் பதினாறு நொடிகளின் பின்னர் நாடகத்தை நீங்கள் கேட்கலாம்.)

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை கிழக்கின் பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின.

பகுதி - 2

இந்த நாடகங்களில் பங்கு கொண்ட ஒரு கலைஞன் என்ற வகையில் எனது வலைத்தள வாசகர்களுடனும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பி இவற்றை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது “மௌனத்தின் புன்னகை“ என்ற ஒரு நாடகம். வலையேற்ற வசதிக்காக இந்நாடகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளேன்.

இந்நாடகங்களுள் நான் தேர்ந்தெடுத்தவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

பகுதி - 3

இந்நாடகங்களை எனது வலைத் தள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கிய தயாரிப்பாளர் எம்.சி. ரஸ்மின் மற்றும் இந்நாடகத் தயாரிப்பில் முழு மூச்சாகச் செயற்பட்ட ஏ.எல். ஜபீர் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நாங்கள் வாசகர்களாகிய உங்களிடம் நாடகங்கள் பேசும் விடயங் குறித்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

எல்லோரும் நன்றாயிருக்கப் பிரார்த்திப்போம்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Najimudeen said...

Congratulations to the Author and Mr. Ashraff Sihabdeen, drama is very good, but only one comment, do not take it as serious matter, there is a smell of propaganda and that intervenes in the real time experience. we know it is part and partial of tamil culture, intermingled in eastern province muslims' lives in reality. I could not ignore the feeling of how this serials of Tamilnadu catch the hearts and minds of the people without any serious message-

Shaifa Begum said...

”மௌனத்தின் புன்னகை” அருமையான ஒரு கரு. இந்த காலத்தில்
இப்படியான மருமகன்மார் , இப்படியான மாமியார்கள் இருப்பார்களோ
என்பதில் சந்தேகம்தான்..மரியாதைக்காக கதவிடுக்கில் ஒழிந்து ஓட்டையால்
எட்டிப்பார்க்கும் ஒரு காலம் இருந்தது. ஆனால் இந்த மாமியார் அப்படி இல்லை.
ஏதோ ஒரு பயத்தின் காரணமாகத்தான் இப்படி இறங்கி போகிறாரோ, பதுங்கி போகிறாரோ, என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த மருமகன் மேல் எனக்கு கடுங்கோபம் வருகிறது . அப்பாவி மாமி ஏன் தான் இப்படி வளைந்து கொடுக்கிறாங்களோ..?பெண்பிள்ளைகள் பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டால் மாமிமார்களின் நிலை இதுவாக தான் இருக்குமோ..?

மற்றபபடி சொல்லப்போனால்,பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் கலைஞர்கள் சிறப்பாக உயிர் கொடுத்திருக்கிறார்கள். ..குறிப்பாக மாமி .. மருமகன் நடிப்பில் உச்சம்.. அதேவேளை மகள் மரினா கூட சளைத்தவர் இல்லை. அசடு வழிந்து சங்கடப்படும் இடங்களில் மிக அருமையாக செய்திருக்கிறார்.மகன் கூட தன் பணியை சிறப்பாக செய்திருக்கறார். தாயை .. மச்சானை கடிந்து கொள்ளும் இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்

கதை ஆசிரியை சில்மியா பேகம் கதை சொன்ன விதம் மிகப்பிடித்துக் கொண்டது.
மருமகனுக்கு திருந்த சந்தர்ப்பம் கொடுக்காமல், அவர் விடும் பிழையை
உணரமுடியாமல், பாதியில் கதையை முடித்துக் கொண்டது போல ஒரு உணர்வு.
என்றாலும் கூட தலைப்பிற்கு ஏற்ற கதைதான் என்பதை மறுக்க முடியாது.வாழ்த்துக்கள்
உங்களுக்கு !

தயாரிப்பு , நெறியாள்கை பற்றி சொல்லத் தேவையில்லை. அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது. பின்னணி இசை. பின்னணி ஒலியமைப்பு.மிக மிகச் சிறப்பு. ஏதோ நிஜத்தில்
நடப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. வதழ்த்துக்கள் !

மற்றும் , இணையம் ஊடாக இதனை எடுத்து வந்த சேர் உங்களுக்கும் நன்றிகள் !
தொடர்ந்து இந்த பணியை செய்யுங்கள்.. நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு நாடகம்
கேட்டதில் மகி்ழச்சி. இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம்...